உள்ளூர் செய்திகள்

கண் சிகிச்சை முகாம்..

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி கிளப் தலைவர் வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.கோவை சங்கரா கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 150 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 48 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ