| ADDED : ஆக 12, 2024 06:33 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே குடும்பத் தகராறில் சென்ட்ரிங் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சின்னசேலம், வானகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன், 45; சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வந்த ஜெயசீலனுக்கும், அவரது மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது.இதனால், மனமுடைந்த ஜெயசீலன் சின்னசேலம் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.