உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பசுமாடு உதைத்து விவசாயி பலி

பசுமாடு உதைத்து விவசாயி பலி

தியாகதுருகம்,; தியாகதுருகம் அருகே பால் கறந்த போது பசுமாடு உதைத்ததால் விவசாயி இறந்தார்.தியாகதுருகம் அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன், 65; விவசாயி. இவர் கடந்த, 4 ம் தேதி வீட்டில் உள்ள பசு மாடு அருகே அமர்ந்து பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது மார்பில் பசுமாடு உதைத்தது. இதில் மயங்கி விழுந்தவரை குடும்பத்தினர்,சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கருப்பன் இறந்தார்.இது குறித்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை