உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம்:கல்வராயன்மலையில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையைச் சேர்ந்த புதுபாலப்பட்டு, வடபாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி ஆகிய மலை கிராமங்களில் மலைவாழ் மக்கள் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.குறைந்த செலவில் நிறைந்த லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.மேலும் அறுவடை சமயத்தில் சேலம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் விதைக்காக மக்காச்சோளத்தை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.இதனால் கல்வராயன்மலை பகுதி விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை