உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உழவர் செயலியில் பதிவு செய்து மானிய உதவிகளை பெறலாம் *வேளாண்மைத்துறை ஆலோசனை

உழவர் செயலியில் பதிவு செய்து மானிய உதவிகளை பெறலாம் *வேளாண்மைத்துறை ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து மானிய உதவிகளை பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த அவரது செய்திக்குறிப்பு:தமிழக அரசின் வேளாண்மைத்துறை மூலம் 'உழவர்' மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் விவசாயிகளின் வளர்ச்சிக்கு தேவையான 24 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.மானிய திட்டங்கள் மூலம் வழங்கப்படும் இடுபொருட்களை விவசாயிகள் பெறுவதற்கு உழவர் செயலி மூலம் தேவையான விவரங்களையும் ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.உழவர் செயலின் மூலம் பயிர் சாகுபடி வழிகாட்டி, இயற்கை விவசாய விலை பொருட்கள் விவரம், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், கருத்துக்கள், பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.உழவர் செயலியை ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்து பூச்சி நோய் கண்காணிப்பு என்ற சேவையின் மூலம் தங்கள் சாகுபடி பயிர்களில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதலை புகைப்படம் எடுத்து அனுப்புவதன் மூலம் தங்கள் மொபைல் போனிற்கு குறுஞ்செய்தியாக பெற்று பயன்பெறலாம்.எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து மானிய உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட வேளாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை