உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சூதாடிய ஐந்து பேர் கைது

சூதாடிய ஐந்து பேர் கைது

கள்ளக்குறிச்சி: புதுார் ஓடை அருகே புள்ளித்தாள் விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதுார் ஓடை அருகே புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த இளையராஜா,32; சாமிதுரை,60; சக்திவேல்,47; செந்தில்,40; வெங்கடேசன்,37; ஆகிய 5 பேரும் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது. தொடர்ந்து, 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 60 புள்ளித்தாள்கள் மற்றும் ரூ.400 பணம் ஆகியவற்றை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை