உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

கள்ளக்குறிச்சி : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சார் பதிவாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், பல்வேறு துறைகளில் உதவியாளர் போன்ற 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு கடந்த 20ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. இத்தேர்வுக்கு https://www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில், ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 14ம் தேதி தேர்வு நடக்கிறது.இப்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, இந்திலியில் உள்ள டாக்டர்.ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று முன்தினம் துவங்கியது. வாரம் தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும்.சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும், பாடக்குறிப்புகள், பிரிவு வாரியாக தேர்வு, முழு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்தும், அல்லது 04151 - 295422 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம். அரசு பணிக்கு தயாராகி வருபவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி