உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருக்கோவிலுாரில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நடந்த கண் பரிசோதனை முகாமில் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.திருக்கோவிலுார் பிரதாப்மால் தேஜ்ராஜ் நினைவு அறக்கட்டளை, மகாவீர் பேன்சி ஸ்டோர், ரமேஷ் ஜுவல்லரி, பாபுலால் ஜூவல்லர்ஸ் இணைந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், மார்க்கெட் வீதியில் உள்ள ஜெயின் பிரார்த்தனை கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.பிரதாப்மல் தேஜ்ராஜ் நினைவு அறக்கட்டளை தலைவர் பன்னாலால் தலைமை தாங்கினார். ரமேஷ், மகாவீர், ஜெயின் சங்கர் செயலாளர் நித்தேஷ் முன்னிலை வகித்தனர்.அரவிந்த் கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 270 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 90 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்மல் குமார் உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி