உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு கல்லுாரியில் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு கல்லுாரியில் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.கல்லுாரி முதல்வர் முனியன் செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.inஎன்ற இணையதளம் மூலம் வரும் 20 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணபிக்க வேண்டும். தொடர்ந்து வரும் 24ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்படும்.பின்னர் வரும் மே 28 முதல் 30ம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள், என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., பாதுகாப்பு படை வீரர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட சிறப்பு இட ஒதுக்கீடு மாணவர்கள் கலந்தாய்வு நடக்கும். பொது மாணவர்களுக்கான முதல் கலந்தாய்வு அடுத்த மாதம் ஜூன் 10 முதல் 15 ம் தேதிக்குள் நடைபெறும். இரண்டாம் கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29ம் தேதிக்குள் நடைபெறும். அரசு இட ஒதுக்கீடு விதிகள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., மூலம் மொபைலில் அழைப்பு விடுக்கப்படும். கல்லுாரி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் தேசிய வங்கிகளின் கணக்கு புத்தகம், 5 புகைப்படங்கள், விண்ணப்ப நகல் எடுத்து வரவேண்டும். அத்துடன் அரசு நிர்ணயம் செய்யும் கல்லுாரி கட்டணத் தொகையும் எடுத்து வரவேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை