உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மயான கொள்ளை பாதுகாப்பு எஸ்.பி., ஆய்வு

மயான கொள்ளை பாதுகாப்பு எஸ்.பி., ஆய்வு

உளுந்துார்பேட்டை ; உளுந்துார்பேட்டையில் மயான கொள்ளை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ஆய்வு செய்தார். உளுந்தூர்பேட்டை, பாளையப்பட்டு தெரு மற்றும் அம்மச்சார் அம்மன் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில்களில், மயான கொள்ளை விழா இன்று நடக்கிறது. கடந்த 21ம் தேதி கோவில்களில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி, நாள்தோறும் சுவாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.இவ்விரு கோவில்களிலும் பிரச்னைகள் ஏற்படாமல், திருவிழா அமைதியாக நடப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எஸ்.பி., ரசக்சதுர்வேதி, நேற்று முன்தினம் மாலை இவ்விரு கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, டி.எஸ்.பி., பிரதீப், இன்ஸ்பெக்டர் வீரமணி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை