| ADDED : ஜூலை 11, 2024 04:40 AM
கள்ளக்குறிச்சி : நீலமங்கலத்தில் கணவன் இறந்த துக்கத்தால் மனவேதனையில் இருந்த மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுதர்சன் மனைவி ஜானகி,38; இருவருக்கும் கடந்த 2022ம் ஆண்டு செப்., மாதம் 28ம் தேதி திருமணம் நடந்த நிலையில், தற்போது 9 மாத ஆண் குழந்தைஉள்ளது. கணவன் சுதர்சன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார்.கணவன் இறந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜானகி, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜானகியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வீரன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கணவன் இறந்த துக்கத்தில், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.