உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இந்து குடும்பங்கள் சங்கம நிகழ்ச்சி

இந்து குடும்பங்கள் சங்கம நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஹிந்து முன்னணி சார்பில் 1008 ஹிந்து குடும்பங்களின் சங்கமம், ராமர் பட்டாபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மனோகர், புதுச்சேரி மாநிலத் தலைவர் சனில்குமார் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினார். புதுச்சேரி கோட்ட தலைவர் சிவா வரவேற்றார்.நிகழ்ச்சியில் ராமர் பட்டாபிஷேகம், ராம நாம லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து செண்டலங்கார செண்பகமன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் ஆசியுரை, சொற்பொழிவாளர் சிந்துஜா, திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.ஏற்பாடுகளை, கள்ளக்குறிச்சி இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ