உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீடு புகுந்து 13 சவரன் நகை கொள்ளை தியாகதுருகம் அருகே துணிகரம்

வீடு புகுந்து 13 சவரன் நகை கொள்ளை தியாகதுருகம் அருகே துணிகரம்

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே வீட்டின் கதவை உடைத்து 13 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவ் ராவ் மகன் மணிகண்டன், 35; நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.இவர், கடந்த 27ம் தேதி இரவு 8:00 மணிக்கு தனது குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே பீரோவில் இருந்த 13 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.தகவலறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் மற்றும் கைரேகை பிரிவினர் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.புகாரின் பேரில் வழக்குப் பதிந்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ