உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்கம்

திருக்கோவிலுார், : மணலுார்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்க விழா நடந்தது. சிதிலமடைந்த நிலையில் இருந்த கோவிலைப் புனரமைக்க வேண்டி பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திருப்பணி நேற்று முன்தினம் துவங்கியது. நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் ரேவதி, தி.மு.க., நகர செயலாளர் ஜெய்கணேஷ், பேரூராட்சி துணை சேர்மன் தம்பிதுரை, அறநிலையத்துறை செயல் அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் நகர செயலாளர் தெய்வசிகாமணி, எழுத்தர் நரேஷ் குமார் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை