உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கார்கில் வெற்றி தின விழா

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கார்கில் வெற்றி தின விழா

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.சண்முகம் கலை-அறிவியல் கல்லுாரியில் கார்கில் வெற்றி தின விழா நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் அகமதுசுல்தான் முன்னிலை வகித்தார். கல்லுாரி என்.சி.சி., அலுவலர் பாண்டியன் வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்துரை வழங்கினார். கார்கில் போரில் உயிர்நீத்த தமிழ்நாட்டை சேர்ந்த மேஜர் சரவணனின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் நாம் தலைவணங்குவோம் என உறுதியேற்றனர். தொடர்ந்து கார்கில் போர் பற்றிய குறும்படங்கள் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிற கல்லுாரி மாணவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.என்.சி.சி., மாணவர் திலீபன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ