உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கொத்தனார் மர்ம சாவு போலீஸ் விசாரணை

கொத்தனார் மர்ம சாவு போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி, - கச்சிராயபாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்த கிடந்த கொத்தனார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த செம்படாக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுப்புராவ் மகன் வெற்றி வேல், 38; கொத்தனார். திருமணமாகி பவானி, 21; என்ற மனைவியும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளது.வெற்றிவேலுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த 29ம் தேதி ஏமப்பேரில் உள்ள மனைவி பவானியின் தாயார் வீட்டிலிருந்து செம்படாக்குறிச்சி சென்று வருவதாக வெற்றிவேல் கூறிச் சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் 5:00 மணிக்கு ஏர்வாய்ப்பட்டினத்தில் அங்குள்ள ஒருகரும்பு தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கச்சிராயபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெற்றிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பவானி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை