மேலும் செய்திகள்
கள்ளச்சாராய வழக்கில் இருவரின் காவல் நீட்டிப்பு
09-Aug-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 68 பேர் இறந்தனர்.இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகள், மெத்தனால் சப்ளையர்கள் என 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களின் விரியூர் பெரியநாயகம் மகன் நடுப்பையன் (எ) ஜோசப், 35; மல்லிப்பாடி ஏழுமலை, 36; சென்னை மதுரைவாயில் காண்டீபன் மகன் சிவக்குமார், 39; புதுச்சேரி மடுகரை மாதவன் மகன் மாதேஷ், 19; ஆகிய 4 பேரையும், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., வினோத்சாந்தாராம் பரிந்துரையை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.
09-Aug-2024