உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொடர் திருட்டு, வழிப்பறி இருவருக்கு குண்டாஸ்

தொடர் திருட்டு, வழிப்பறி இருவருக்கு குண்டாஸ்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு, வழிபறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சின்னசேலம் அடுத்த திம்மலை கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் மகன் பெருமாள்,45; கண்ணன் மகன் சிவா,30; இவர்கள் இருவர் மீதும் சின்னசேலம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வழிபறி, திருட்டு, டாஸ்மாக் சூப்பர் வைசரிடம் பணம் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஜூலை 15 ம் தேதி திருட்டு வழக்கில் இருவரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி பெருமாள், சிவா ஆகியோரின் இது போன்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஏற்கனவே கடலுார் மத்திய சிறயைில் உள்ள பெருமாள், சிவா ஆகியோரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தற்கான ஆணையினை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை