| ADDED : ஜூன் 26, 2024 01:59 AM
சங்கராபுரம், : சங்ககராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 750 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த வாரம் விஷ சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கள்ளச் சாராயம் விற்பதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் சங்கராபுரம் பகுதியில் போலீசார் பல்வேறு கிராமங்களில் சாராய சோதனையில் ஈடுபட்டனர். இதில் சாராயம் விற்ற சேஷசமுத்திரம் பெரியசாமி 36, கண்ணன் 50, ஏழுமலை 50, சுப்ரமணி 40, அரசம்பட்டு இளங்கோ மனைவி அஞ்சலை 55,மோட்டாம்பட்டி முத்து மகன் விஜயகாந்த் 42, வடசெட்டியந்தல் பெரியசாமி 55, வளையாம்பட்டு குமார் 40 ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 750 லிட்டர் சாராயத்தை கைபற்றி வழக்கு பதிந்து கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.