உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேள் கொட்டி சிறுமி பலி

தேள் கொட்டி சிறுமி பலி

கள்ளக்குறிச்சி : கச்சிராயப்பாளையம் அருகே விளை நிலத்தில் தேள் கொட்டியதில் சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.கச்சிராயபாளையம் அடுத்த க.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் மகள் யாழினி, 3; கடந்த 22ம் தேதி காசிநாதன் மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள் ஆகியோர் தங்களது மகள் யாழினியை அழைத்துக்கொண்டு அதே கிராமத்தில் உள்ள விளைநிலத்திற்கு கூலி வேலைக்குச் சென்றார். அங்கு மகள் யாழினியை உட்கார வைத்து விட்டு, பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சிறுமி யாழினியின் காலில் தேள் கொட்டியது. இதனால், அலறித் துடித்த யாழினியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யாழினி நேற்று இறந்தார்.இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ