உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளிவாசலில் முறைகேடு; மூன்று பேர் மீது வழக்கு

பள்ளிவாசலில் முறைகேடு; மூன்று பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பள்ளி வாசலில் வாடகை வசூலில் முறைகேடு செய்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் முகம்மதுஷரீப் மகன் லியாத்அலி,71; இவரது குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி ஜீம்மா பள்ளிவாசல் முத்தவல்லியாக பல ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, கள்ளக்குறிச்சியை சேர்ந்த முகமதுஇக்பால், ேஷக்நசீர், மற்றும் முகமதுபாசில் ஆகிய மூவரும் தமிழ்நாடு வக்புவாரிய தற்காலிக நிர்வாகிகளாக பொறுப்பேற்று செயல்பட்டனர். மூவரும் பொறுப்பேற்றதில் இருந்து நிர்வாகத்தின் கணக்கு வழக்கு, செயல்பாடு தெரிவிக்காமல் இருந்தனர். மேலும், பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளில் வாடகை வசூலித்து, அதற்குரிய ரசீதியை தராமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த லியாத்அலி அளித்த புகாரின் பேரில், முகமதுஇக்பால், ேஷக்நசீர், முகமதுபாசில் ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி