மேலும் செய்திகள்
புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்
06-Feb-2025
பணிகளை முடிக்க அறிவுரை
22-Feb-2025
கள்ளக்குறிச்சி, ; உள்ளாட்சி அமைப்புகளில், எம்.பி., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், பயணியர் நிழற்குடை, நியாயவிலைக் கடை கட்டடம், சாலைப் பணிகள், கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணிகள், ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்தல், பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல், பள்ளி கழிவறை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த பணிகளின் தற்போதைய நிலை, முடிவடையும் காலம், கட்டு மான விபரம் குறித்து கேட்டறிந்து, விரைவாக பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
06-Feb-2025
22-Feb-2025