உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு குழந்தைகளுடன் மாயமான தாய்

இரு குழந்தைகளுடன் மாயமான தாய்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே இரண்டு குழந்தைகளுடன் மாயமான தாயை போலீசார் தேடிவருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், கொண்டநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி அருணாதேவி,23; இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அருணாதேவி, சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தலில் உள்ள தாய் பாப்பு வீட்டிற்கு வந்துள்ளார்.தொடர்ந்து, கணவன் மணிகண்டன் வந்து அழைத்தும், அவருடன் செல்ல மறுத்து அருணாதேவி தனது தாய் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை 8:00 மணியளவில் தாய் பாப்பு வேலைக்கு சென்றதால், வீட்டில் அருணாதேவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.பாப்பு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கண்டுபிடித்து தரக்கோரி பாப்பு சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை