உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய குத்து சண்டை சங்கராபுரம் மாணவர்கள் சாதனை

தேசிய குத்து சண்டை சங்கராபுரம் மாணவர்கள் சாதனை

சங்கராபுரம்: தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் மேலக்கோட்டையூரில் தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டி நடந்தது. தமிழ்நாட்டிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வடசெட்டியந்துார் கிராமத்தைச் சேர்ந்த விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு மாணவர் கோகுல் 55 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார்,.அதேபோன்று, சின்னசேலம் அடத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் பரணிதரன் 61 கிலோ எடை பிரிவிலும் பங்கேற்றனர்.இதில், கோகுல் தங்கப்பதக்கமும், பரணிதரன் வெள்ளிப் பதக்கமும் வென்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற பெற்ற மாணவர்களை சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் சூரியமூர்த்தி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ