உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கார் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் இறந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அடுத்த மாத்துரைச் சேர்ந்தவர் கலியசாமி, 65; இவர் தனது மனைவி கொடிபவுனுடன் உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூர் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள சகோதரி சவுந்தர்யாவை நேற்று முன்தினம் பார்த்து விட்டு இரவு தங்கியுள்ளனர். நேற்று காலை 7:30 மணியளவில் ஊருக்குச் செல்ல வெள்ளையூர் பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது தாம்பரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற கார், கலியசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி