உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக்குகள் மோதல் ஒருவர் பலி

பைக்குகள் மோதல் ஒருவர் பலி

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பைக்குகள் மோதலில் ஒருவர் இறந்தார்.சங்கராபுரம் அடுத்த தாவடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ், 42; இவர், நேற்று முன்தினம் பைக்கில் சங்கராபுரம் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக் ஓட்டி வந்த நபர், சத்தியராஜ் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.இந்த விபத்தில் காயமடைந்த சத்தியராஜ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று அவர் இறந்தார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி