உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோடைகால முன்னெச்சரிக்கை குறித்து ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை

கோடைகால முன்னெச்சரிக்கை குறித்து ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை

சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நடந்த கூட்டத்திற்கு, பி.டி.ஓ., செல்லதுரை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இந்திராணி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சிகளில் உள்ள குடிநீர் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்த வேண்டும். வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.ஊராட்சிகளில் டேங்கர் லாரிகள் முலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில், ஒன்றிய பொறியாளர்கள் ராஜகோபால், அரிகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், மணிகண்டன், சுமதி, பிரியதர்ஷனி மற்றும் அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ