உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச வீட்டு மனை பட்டா கோரி கீழ்நாரியப்பனுார் பகுதி மக்கள் மனு

இலவச வீட்டு மனை பட்டா கோரி கீழ்நாரியப்பனுார் பகுதி மக்கள் மனு

கள்ளக்குறிச்சி : கீழ்நாரியப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்நாரியப்பனுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கீழ்நாரியப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியில் 20 குடும்பத்தினர், கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கிறோம். எங்களுக்கு விளைநிலம், வீட்டுமனை உள்ளிட்ட சொத்துக்கள் எதுவும் இல்லை. அன்றாடம் கூலி வேலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் எங்கள் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, எங்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை