உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போதை மறுவாழ்வு மையம் அமைக்க கலெக்டரிடம் மனு

போதை மறுவாழ்வு மையம் அமைக்க கலெக்டரிடம் மனு

கள்ளக்குறிச்சி : போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தமிழ்நாடு பன்னாட்டு பேராசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லியோ ஸ்டேன்லி தலைமையில் கலெக்டர் பிரசாந்த்திடம் அளித்துள்ள மனு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி மதுப்பழக்கத்திலிருந்து அவர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட தலித் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியும் தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை