உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் மறியல்

குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் மறியல்

கள்ளக்குறிச்சி : தென்கீரனுாரில் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் கிராமத்தில் 9வது வார்டு பகுதியில் 120 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.கடந்த ஒரு வாரமாக போதுமான அளவு குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர்.இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் நேற்று காலை 7:30 மணியளவில், கள்ளக்குறிச்சி - விளம்பார் சாலையில் ராஜிவ்காந்தி நகர் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனையேற்று, காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை