| ADDED : மே 26, 2024 06:10 AM
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 121 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் டி.வி.எஸ்., அசோக் லேலண்ட், உள்ளிட்ட 10க் கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றது.இதில் 300க் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு 121 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமனை ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார், கல்லூரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை நிறுவனங்கள் சார்பில் வழங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஏழுமலை, துணைத்தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனி ராஜ், துணை முதல்வர் மீனாட்சி கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், நிர்வாக அலுவலர் குமார், பேராசிரியர்கள் புருஷோத்தமன், விஜயலட்சுமி, மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.