உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விபத்தில் பெண் மரணம் போலீஸ் விசாரணை

விபத்தில் பெண் மரணம் போலீஸ் விசாரணை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாலை விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலை, மேலேரி அருகே நேற்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க பெண் சாலை விபத்தில் இறந்து கிடந்தார்.சங்கராபுரம் போலீசார், உடல் நசுங்கி அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அந்த பெண் உடலை கைபற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி