உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரி ஆண்டு விழா

ஆர்.கே.எஸ்., கல்லுாரி ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார். கள்ளக்குறிச்சி விவேகானந்தா ஐ.ஏ.எஸ். அகாடமி தாளாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். கல்லுாரி தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜி, துணைத்தலைவர்கள் மணிவண்ணன், திருஞானசம்பந்தம் மற்றும் ரவி வாழ்த்திப் பேசினர்.நிகழ்ச்சியில், மாணவர்கள் தாங்கள் செய்யும் பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். பெண்கள் சுய சார்போடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நகைச்சுவை நடிகர் ஹரிதேவாவின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ