உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் காணாமல் போன பள்ளி மாணவியை, போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, ஏமப்பேரை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சந்தியா,14; அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, அரசு பள்ளியில், 9 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 7ம் தேதி மதியம் 3:00 மணியளவில் வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பாட்டி, அமுதவள்ளி, கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை