உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஞ்சு மூட்டைகள் வரத்து குறைவு பருத்தி வார சந்தை ரத்து

பஞ்சு மூட்டைகள் வரத்து குறைவு பருத்தி வார சந்தை ரத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.தற்போது சீசன் முடியும் தருவாயில் இருப்பதால் பருத்தி மூட்டைகளின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. குறைவான பஞ்சு மூட்டைகளே விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் வார சந்தையில் வர்த்தகம் தடைபடுகிறது. அதன்படி நேற்று சந்தைக்கு 30க்கும் குறைவான மூட்டைகளே விற்பனைக்கு எடுத்து வந்ததால், வர்த்தகத்தை ரத்து செய்து, அடுத்த வாரம் சந்தை நடத்தப்படும்.வரும் டிசம்பர் மாதத்திலிருந்துதான் பஞ்சு மூட்டைகளின் வரத்து மீண்டும் அதிகரிக்கும். அதுவரை பருத்தி வார சந்தையில் வர்த்தகம் அவ்வப்போது தடைபடும் எனவும் மேலாண் இயக்குனர் செந்தில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை