உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காட்சிப்பொருளான மினி குடிநீர் தொட்டி

காட்சிப்பொருளான மினி குடிநீர் தொட்டி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் போர்வெல் பழுதடைந்து மினி குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பின்புறம் போர்வெலுடன் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் போர்வெல் மோட்டார் பழுதடைந்து நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பயன்பாடின்றி மினி குடிநீர் தொட்டி வெறும் காட்சிப் பொருளாக உள்ளது. அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பழுதடைந்த போர்வெல் மோட்டாரை சீரமைத்து, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ