உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் 30ம் தேதி சிறப்பு கலந்தாய்வு

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் 30ம் தேதி சிறப்பு கலந்தாய்வு

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 30ம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.ரிஷிவந்தியம் அரசு கல்லுாரி முதல்வர் மணிகண்டன் (பொ) விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு வகுப்புகளில் சேருவதற்காக, விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெறப்பட்டது. இதில், சிறப்பு ஒதுக்கீட்டின் படி விண்ணப்பித்துள்ள விளையாட்டுத்துறை, தேசிய மாணவர் படை, உடல் ஊனமுற்றோர் பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கும், முன்னாள் ரானுவத்தினரின் வாரிசுதாரர்களுக்கும் வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது.சிறப்பு கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் இணையதள விண்ணப்பம், அசல் மற்றும் நகல் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்கள், ஜாதிச்சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு நகல், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கும், ரிஷிவந்தியம் அரசு கல்லுாரிக்கு காலை 10 மணிக்கு வரவேண்டும் என்று செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை