உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம்

டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம்

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் திம்மாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் பற்றாக்குறை நிலவியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வயல்வெளி பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் அரசு பஸ்களை சிறைபிடித்து, காலி குடங்களுடன் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மின்மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், மின்மோட்டார் சரிசெய்ய இரண்டு நாட்களாகும் எனவும், அதுவரை மாற்றுமுறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.தொடர்ந்து, சின்னசேலம் பி.டி.ஓ., ரவிசங்கர் உத்தரவின்பேரில், திம்மாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் நேற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ