உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இந்தியாவில் நல்லாட்சி மலர்ந்திட தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள்: உதயசூரியன் எம்.எல்.ஏ., பிரசாரம்

இந்தியாவில் நல்லாட்சி மலர்ந்திட தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள்: உதயசூரியன் எம்.எல்.ஏ., பிரசாரம்

கள்ளக்குறிச்சி : இந்தியாவில் நல்லாட்சி மலர அனைவரும் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளியுங்கள் என இறுதிகட்ட பிரசாரத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ., பேசினார்.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசன் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.நேற்று மாலை 3:30 மணிக்கு கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகன பேரணியுடன் பிரசாரத்தை துவங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.மந்தைவெளி மைதானத்தில் பிரசாரத்தை நிறைவு செய்து உதயசூரியன் எம்.எல்.ஏ., பேசியதாவது : முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சியில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். தேர்தல் பிரசாரம் துவங்கியதிலிருந்து தொடர்ந்து நடந்த பிரசாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ளகிறேன். அ.தி.மு.க.,வின் இ.பி.எஸ்.,-ஓ.பி.எஸ்., ஆகியோரின் ஒப்புதலோடுதான் தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டது. இதனால்தான் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனை மக்கள் உணர்ந்து உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து, மலையரசனை வெற்றி பெற செய்யுங்கள் என பேசினார்.மாநில மகளிரணி துணை தலைவி அங்கையற்கண்ணி, மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர செயலாளர் சுப்ராயலு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, அன்புமணிமாறன், பெருமாள், பாண்டுரங்கன், துரைமுருகன், செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய சேர்மன் தாமோதரன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், முரளி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை