உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தமிழ் படைப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ் படைப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

சங்கராபுரம்: சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது. வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், ஆசிரியர் வீரன், தலித்சந்திரன், தாமோதரன், திருவருள் முன்னிலை வகித்தனர்.சங்க புதிய தலைவராக டாக்டர் நெடுஞ்செழியன், துணை தலைவராக ஆசிரியர் கமலநாதன்,செயலாளராக ராஜன், துணை செயலாளர்களாக ஆண்டப்பன், சக்திவேல், வேலு, பொருளாளராக கோவிந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை சங்க உறுப்பினர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை