உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று விளக்கூர் ஏரிக்கரை அருகே ரோந்து சென்றனர். அப்போது அவர்களைப் பார்த்த வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.அவரை பிடித்து போலீசார் சோதனையிட்டதில் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பாக்கெட்டை பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட நபர் விளக்கூர் புது காலனியை சேர்ந்த கேசவன் மகன் மனோஷ், 26; என தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ