உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / களைக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

களைக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே, வயிற்று வலியால் களைக்கொல்லி மருந்து குடித்த வாலிபர் இறந்தார்.சின்னசேலம் அடுத்த நைனார்பாளையத்தைச் சேர்ந்தவர் துரை மகன் முத்துக்குமார், 25; இவருக்கு வயிற்றுவலி இருந்து வந்தது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த 21ம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், மனமுடைந்த முத்துக்குமார் களைக்கொல்லி மருந்தை குடித்தார்.உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார்.புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி