| ADDED : மார் 21, 2024 11:30 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை சட்டமன்ற அலுவலக நுழைவுவாயில் இரவு நேரத்தில் ஜொலிக்கும் எம்.எல்.ஏ.,வின் பெயரை மூடி மறைக்க தேர்தல் அதிகாரிகள் மறந்துவிட்டனர்.உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.அதன் பேரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பஸ் நிலைய நிழற்குடை பகுதியில் நகராட்சி சேர்மன், துணை சேர்மன் பெயர்கள் இடம் பெற்ற பெயர் பலகைகள், முதல்வரின் உருவப்படங்கள், சிலைகளை மூடி மறைக்கப்பட்டன. ஆனால் உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்திற்குள் இருந்த எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் பெயர் துணியால் மூடியுள்ளனர்.ஆனால் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ.,வின் பெயரை மூடி மறைக்கவில்லை. அதே நேரத்தில் அதற்கு பக்கத்தில் உள்ள முதல்வரின் படத்தை மட்டும் அனைவருக்கும் தெரியும் வகையில் துணியால் மூடியது போல் மூடியுள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் மின் விளக்கு வெளிச்சத்தில் பளிச்சென எம்.எல்.ஏ., பெயர் மின் வெளிச்சத்தில் ஜொலிக்கிறது. தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் எதிர்க்கட்சியின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.