உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தண்ணீர் தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மது போதையில் தண்ணீர் தொட்டியில் விழுந்த கூலி தொழிலாளி இறந்தார். அரியலுார் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி மகன் சதீஷ் குமார் 36; கூலி தொழிலாளி.இவர் தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரில் உள்ள தனது மாமனார் சங்கர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வடதொரசலுார் அம்மன் நகர் அருகே சாலையை ஒட்டி உள்ள தண்ணீர் தொட்டி அருகே அமர்ந்திருந்த போது நிலை தடுமாறி தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்தார். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சதீஷ்குமார் உடலை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ