உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்

திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து முன்னாள் மாணவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட்டு நுாறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நுாற்றாண்டு விழா நடத்த முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.தலைமை ஆசிரியர் பாஸ்கர் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சார்பில் தொழிலதிபர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் செல்வராஜ், விநாயகமூர்த்தி, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் குணா, அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் வாசன், கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், புவனேஸ்வரி ராஜா, ரவி, கந்தன்பாபு, துரைராஜன், பா.ஜ.., சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகம் துவக்க உரையாற்றினார். வரும் ஜூலை, 20ம் தேதி நுாற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது, இப்பள்ளியில் பயின்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளை விழாவிற்கு நேரில் அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உதவி தலைமை ஆசிரியைகள் ஜெயந்தி, கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ