| ADDED : ஜூலை 30, 2024 11:22 PM
சங்கராபுரம் : சங்கராபுரத்தல், காமராஜர் பிறந்த நாள் விழா, தமிழ்நாடு தினம், தொடர் இலக்கிய சொற்பொழிவு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.தமிழ் படைப்பாளர் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், முன்னாள் தலைவர் இளையாபிள்ளை, சாந்தகுமார், கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.காமராஜர் படத்தை ஆமினா அறக்கட்ளை நிர்வாகி இதயதுல்லா திறந்து வைத்து பேசினார். ஆசிரியர் ரகுநந்தன் தமிழ்நாடு தினம் தலைப்பில் பேசினார். சாந்தகுமார், கோவிந்தன் முன்னிலையில் தொடர் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நெடுமானுார் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் கதிர்வேல், தலைமை ஆசிரியை லட்சுமி, ராமசாமி, சாதிக் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். செயலாளர் ஆண்டப்பன் நன்றி கூறினார்.