உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மலைப்பகுதியில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்

மலைப்பகுதியில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மலைப்பகுதியில் மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள மனைகள் 2016ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் உள்ள விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தலாம். இதற்கு வரும் நவம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnlayouthillareareg.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.இதுவரை மலை பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள இறுதி வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ