| ADDED : ஜூன் 16, 2024 06:45 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கிராவல் மண் கடத்திச் சென்றபோது டிராக்டர் டிப்பர் மோதியதில், தோஸ்த் வாகனம், வீடு சேதமடைந்ததால் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்த பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் விஜய், 28; இவர் கடந்த 13ம் தேதி நள்ளிரவு ஜான்டியர் டிராக்டர், பதிவெண் இல்லாத டிப்பரில் அரை யூனிட் கிராவல் மண் கடத்திச் சென்றார். வெங்கட்டாம்பேட்டை அருகே சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த தோஸ்த் வாகனம் மீதும், அருகில் இருந்த மின்கம்பம் மற்றும் முஸ்தபா என்பவரின் வீட்டின் மீதும் விஜய் ஓட்டிச் சென்ற டிராக்டர் மோதியது.இது குறித்து கச்சிராயபாளையம் வி.ஏ.ஓ., சங்கர் அளித்த புகாரின் பேரில், விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் விஜய் மற்றும் வாகன உரிமையாளர் பரிகத்தைச் சேர்ந்த முருகேசன், 42; ஆகிய இருவர் மீதும் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.