உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொய்க்குனம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

பொய்க்குனம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பொய்குனம் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கிராம வேளாண் முன்னேற்ற குழு முன் பருவ பயிற்சி நடந்தது.ஊராட்சி தலைவர் அன்பு தலைமை தாங்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் மவிசுதா முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் கோடை உழவு, மண் பரிசோதனை அவசியம், மண் வள மேம்பாடு, விதை நேர்த்தி, இயற்கை விவசாயம், உழவன் செயலி பயன்பாடு, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சொட்டு நீர் பாசனத்தின் பயன்பாடு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோகப்பிரியா மற்றும் 125 விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை