உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையில் கழிவுநீர் சுகாதார சீர்கேடு

சாலையில் கழிவுநீர் சுகாதார சீர்கேடு

கள்ளக்குறிச்சி: நீலமங்களம் வெஸ்ட்நகர் பகுதியில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்களம் நரிகுறவர் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். புறவழிச்சாலையை ஒட்டியவாறு இருப்பதால் இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தி வீணாகும் உபரிநீரை கழிவுநீர் கால்வாய் வழியாக வெளியேற்றுகின்றனர். நீலமங்களம் வெஸ்ட்நகர் பகுதி வழியாக சாலையோரத்தில் ஏரிக்கு கழிவுநீர் கால்வாய் செல்கிறது.நீலமங்களம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில், கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கால்வாய் நிரம்பி அருகில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் கழிவுநீர் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை வழியாக கழிவுநீர் வெளியேறும்படி மாற்று ஏற்பாடு செய்தனர்.தற்போது, கூட்ரோடு பகுதியில் இருந்து கூத்தக்குடி செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் கழிவுநீரினை அகற்றிட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ